சட்டென்று தோன்றியது என்னவளின் நிலை அவளிடத்தில் இருந்துகாதலா – என்னைமன்னித்து விடு மறந்து விடுகாலம் எல்லாம்துணை இருப்பேன் என்று சொன்னவள்நான் தான்வானம் கிழிந்து போனாலும்நிலவு குளிர்மைஇழந்துபோனாலும்சூரியக் குடும்பம்பிரிந்து போனாலும்நிலத்தை கடல் சூழ்ந்து கொண்டாலும்நட்சத்திரம்மின்ன மறுத்தாலும்மழை நீர் சுட்டாலும்காற்று மண்டலதில்ஓட்ஸிசன் குறைந்துபோனாலும்பறவை இனம் பறக்க மறந்தாலும்இயற்கை பொங்கி எழுந்தாலுபலமாற்றங்கள் நிகழ்ந்தாலும் நான் உனை மறவேன்உனை பிரியேன்என்று சொன்னவள் நான் தான்இதை சொல்வதும்நான் தான்மன்னித்து விடுமறந்து விடுநோய்களை அதிகம் நேசிக்கும் – என்அப்பாவுக்காக உண்டது பாதி உண்ணாதது பாதியுமாகஎன்னை நேசிக்கும் – என்அம்மாவுக்காக என்னை கரை சேர்க்கஅல்லல் படும் – என் அண்ணனுக்காகஇவர்களை புரிந்து கொள்ளாமல் – உனைநேசித்ததும் காதலித்ததும்தவறு என புரிந்து – உனைகேக்கிறேன் மன்னித்து விடுமறந்து விடுஉயர்ந்த இடத்தில் – என்னைகட்டிக்கொடுத்து உயர்வடைய காத்திருக்கும் இவர்களுக்காகஎன் காதலை புதைத்து விட்டு விலகி நின்று சொல்கிறேன் என்னை மன்னித்து விடுமறந்து விடு !! என்றது என்னவளின் உதடு..

Advertisements
  • ​நம்மிடையேயான மைல்கற்கள் விடும்சவால்களை தகர்த்தெறிய முடியும்என்னால் மிக எளிதாய் பெண்ணே…
   மௌனம் காக்கும் உன்

   மாதுளை நிற இதழ்கள்..

   மோதிப்பார் என சவால் விடுகிறதே…
   மோதினால் என் இதழ்கள்

   மட்டுமல்ல.. இதயமும்

   உன்னிடம் தோற்று நிற்கும்..
   சுகமே என்றாலும்

   உனதன் அன்பும் 

   உன்

   சம்மதத்தோடு கூட வேண்டும்..
   அதுவரை..

   பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்..

   உனக்காய் உன் அன்பிற்காய்  காத்திருக்கும் உன்னவன்…

   நிவாஸ் தாசன் 

கவிதையை முடிக்க

வார்த்தைகள் இன்றி 

தவிக்கும் கவிஞன் போல

பிரிவை போல்..

கொடுமையான ஒன்று இந்த உலகில் எதுவும் இல்லை….

ஒருவரை பிரிந்திருக்கும் போதுதான் அவர்களின் பாதிப்பு நம்மீது எவ்வளவு இருக்கிறது என்பதை உணரமுடியும்….
சமீபத்தில் பிரிவின் வலியை அனுபவிக்க நேர்ந்தபோது தோன்றிய எண்ணங்கள்….

இமை மூட நினைக்கும் போதெல்லாம் விழிகளும் வினா தொடுக்கிறது

அவள் கனவுகளுக்காக

மட்டும் தானே என்னை அழைக்கிறாய் என…
சிரித்தபடி நான்

சின்னதாக வெக்கத்துடன் நித்திரையை கூட தியாகம் செய்து 

பேனா எடுத்து எழுத்துக்கள் மூலம் என் வார்த்தைகளை புதிப்பிக்கிறேன்

அவள் விழித்ததும்

அவளுடைய பார்வைக்கு இதை ஒப்படைப்போம் என…
என் அதிகார அன்புக்குள்

அடைக்களம் ஆனவளை…

அன்பாக கவனிக்கிறேன்

சிறிதான ஒரு சிக்கலும் இல்லாது…
என் பாசம் பல விதமாக இருந்தும்

அவள் மேல் நான் கொண்ட பாசம்

அவளுக்காக மட்டும் ஒரு விதமே…

நான் நெய்த என் நேசம் என் சுவாசம் வரை அவளோடு பேசும்…


நிவாஸ் தாசன் 

கவிதையை முடிக்க,

வார்த்தைகள் இன்றி –

தவிக்கும் கவிஞன் போல

பிரிவை போல்..
 கொடுமையான ஒன்று இந்த உலகில் எதுவும் இல்லை….
ஒருவரை பிரிந்திருக்கும் போதுதான் அவர்களின் பாதிப்பு நம்மீது எவ்வளவு இருக்கிறது என்பதை உணரமுடியும்….
சமீபத்தில் பிரிவின் வலியை அனுபவிக்க நேர்ந்தபோது தோன்றிய எண்ணங்கள்….

பாசம் ..

​இதயம் என்பது ஒரு வினோதமான 

சிறைதான் !

ஏனென்றால் ..

இதில் குற்றம் செய்பவர்கள் 

மாட்டிக் கொள்வதில்லை.

பாசம் வைப்பவர்கள் மட்டுமே 

மாட்டிக் கொள்கிறார்கள்..